சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. குறிப்பாக இவர் நடித்த சத்யா சீரியல் மிகவும் பேமஸ் ஆனதால், அதன்மூலம் ஆயிஷாவுக்கு புகழ் வெளிச்சமும் கிடைத்தது. இதையடுத்து அந்த சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் ஆயிஷா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் சண்டக்கோழியாக இருந்த ஆயிஷா, பின்னர் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக மாறினார்.