Leo
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக லியோ என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன், மிஷ்கின், வையாபுரி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
Leo
லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது லியோ படக்குழு மீண்டும் காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆகிப் போய் உள்ளனர். இந்த முறை படத்தின் பேட்ச் ஒர்க்கிற்காக காஷ்மீர் செல்ல உள்ளதாம் படக்குழு.