மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்

Published : Jul 02, 2023, 07:45 AM IST

மாமன்னன் படத்தில் வரும் வில்லன் பகத் பாசிலின் கேரக்டர் எடப்பாடி பழனிச்சாமி கேரக்டரை ஒத்து இருப்பதாக கூறி போடப்பட்டுள்ள டுவிட்டிற்கு உதயநிதி ரிப்ளை செய்துள்ளார்.

PREV
15
மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்
maamannan

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவரின் சினிமா கெரியரில் கடைசி படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடித்துள்ளார். மேலும் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பகத் பாசிலும் நடித்துள்ளனர். மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை அன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

25
maamannan

ரிலீசுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இப்படம், ரிலீசுக்கு பின் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் சபாநயகராக இருந்த தனபாலின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தில் வடிவேலுக்கு இத்தனை கோடி சம்பளமா? கிள்ளி கொடுக்காமல்... அள்ளி கொடுத்த தயாரிப்பாளர்!

35
maamannan

தனபால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காக அவரை அவருடைய கட்சியினரே இழிவுபடுத்தியதாகவும், அதனை தான் மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டராக உள்ளது என்றும் ஒப்பிட்டு வருகின்றனர். வடிவேலுவை தனபாலோடு ஒப்பிடும் நெட்டிசன்கள், இப்படத்தில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக வில்லன் கேரக்டரில் நடித்த பகத் பாசிலை எடப்பாடி பழனிச்சாமியோடு ஒப்பிட்டு, இப்படத்தில் பகத் பாசில் மாவட்ட செயலாளராக இருந்தது போல் அந்த சமயத்தில் எடப்பாடி தான் மாவட்ட செயலாளராக இருந்தார் என பதிவிட்டு வருகின்றனர்.

45
maamannan

நெட்டிசன்களின் இந்த பதிவுக்கு உதயநிதி பதிலளித்து உள்ளது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நெட்டிசன் ஒருவர், “தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து 'நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு ரிப்ளை செய்துள்ளார் உதயநிதி. அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.

55
maamannan

மறுபுறம் இந்த பதிவை அதிமுகவினர் கிண்டலடித்து வருகின்றனர். தனபால் திருப்பூரை சேர்ந்தவர், எடப்பாடி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை எப்படி இந்த வில்லன் கேரக்டரோடு ஒப்பிட முடியும் என கேள்வி எழுப்பி வருவதோடு, எந்த மாவட்டத்துல எந்த தொகுதி வருதுன்னு கூட தெரியல... நீங்கெல்லாம் அமைச்சரா என உதயநிதியை அதிமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'மாமன்னன்' பட வெற்றியை ஏ.ஆர்.ரகுமானுடன் கேக் வெட்டி கொண்டாடிய கீர்த்தி - உதயநிதி! வைரலாகும் போட்டோஸ்!

click me!

Recommended Stories