தமிழ் சினிமாவில், தன்னுடைய ஈடு இணையற்ற காமெடி சென்ஸ் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்து வருபவர் வைகை புயல் வடிவேலு. கதாநாயகனாக நடிக்க துவங்கிய பின்னர் காமெடி வேடங்களை ஏற்று நடிக்க மறுப்பு தெரிவித்த வடிவேலுவுக்கு, ஷங்கர் தயாரிப்பில் 24 ஆம் புலியேசி பிரச்சனைம், ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்று இவரின் திரையுலக வாழ்க்கையையே ஆட்டம் கே கான வைத்தது.
இந்நிலையில் இவர் இதுவரை ஏற்று நடிக்கிறாத வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன். ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தார். உதயநிதிக்கு தந்தையாக, கிட்டதட்ட ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரத்தில் மாமன்னனாக நடித்திருந்தார் வடிவேலு.
இந்நிலையில் வடிவேலுவின் திரை உலக வாழ்க்கையில், மிகப் பெரிய மையில் கல்லாக அமைந்திருக்கும் 'மாமன்னன்' படத்தில் நடிக்க, வடிவேலு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்கிற தகவல்தான் வெளியாகி உள்ளது. ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால், வடிவேலுக்கு இரண்டு முதல் மூன்று கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வடிவேலுக்கு இருக்கும் தனித்துவத்தை அறிந்தே தயாரிப்பாளர் சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.