லியோ சர்ச்சைக்கு மத்தியில்.. மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கடிதம் எழுதிய நடிகர் விஜய்.. அடேங்கப்பா.!

First Published | Jul 1, 2023, 6:19 PM IST

தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார்.

அதுமட்டுமின்றி, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.

Tap to resize

அதேபோல லியோ படத்தில் இடம் பெற்ற நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இதில் தளபதி விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இருப்பதால் உச்ச நடிகர் இப்படியொரு செயலில் ஈடுபடலாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று, நலத்திட்ட உதவிகள் வழங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”கடந்த ஜூன் 22 அன்று, எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அறிந்தேன். உங்களின் இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  பிரியமுடன் விஜய்” என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் பேவரைட் பைக்.. இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பனிகேல் V4-R - விலை இவ்வளவா.!

Latest Videos

click me!