இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 29ஆம் தேதி வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதைத் தொடர்ந்து, பட குழுவினர் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
வழக்கம்போல் தன்னுடைய கதைகளில் கூறப்படும், இரு சாதியினருக்கு இடையே காட்டப்படும் வேறுபாட்டை மீண்டும் 'மாமன்னன்' படத்தில், மாரி எடுத்துக்காட்டி இருந்தாலும்... அரசியல் கண்ணோட்டத்தில் இந்த படத்தை நகர்த்தி சென்றது திரைக்கதைக்கு, வலு சேர்த்தது என கூறலாம். இப்படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம், மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த நிலையில், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
'மாமன்னன்' படத்தின் வெற்றியை, இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறி, இந்த படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.