Priyanka Nalkari
சன் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'ரோஜா' சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது.
'சீதா ராமன்' தொடரில் நடிக்க துவங்கிய சில மாதங்களில் பிரியங்கா தன்னுடைய நீண்ட நாள் காதலரை வெளிநாட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருந்தார். ஆனால் திடீர் என குடும்ப சூழல், மற்றும் கணவரின் விருப்பப்படி சீரியலில் இருந்து விலகுவதை அறிவித்தார்.
புதிய சீதாவாக மிக மிக அவசரம் பட நடிகை ஸ்ரீ பிரியங்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் ஆசாமி படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரூ, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீ ப்ரியங்கா தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.