நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
அதேபோல் கடந்த வாரம் சென்னையில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு பேச மேடை ஏறிய போது, ரசிகர்கள் நம்பர் 1, நம்பர் 1 என கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அவர் ரசிகர்களுடன் சேர்ந்து நம்பர் 1 என கத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து பேசும்போதுகூட விஜய் தான் சூப்பர்ஸ்டார் என பேசி இருந்தார்.
இந்நிலையில், தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் விஜய்யை நம்பர் 1 என சொல்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திரையரங்கு மூலம் வரும் கலெக்ஷனை வைத்து தான் யார் நம்பர் 1 என்பது தீர்மானிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் விஜய்யின் கடைசி 5, 6 படங்கள் திரையரங்கு மூலம் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் ஷேர் கொடுத்துள்ளன. வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவு கிடைக்கவில்லை. படம் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ அதன் வசூல் தான் முக்கியம் என தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... வரிசையாக 6 பெரிய பட்ஜெட் படங்கள்... பல நூறு கோடிகளை வாரி இறைத்த லைகா - 2022 போல் 2023-லும் தட்டிதூக்குமா?