வாரணாசி சம்பளம்: இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் வாரணாசி. சுமார் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக மகேஷ் பாபு, ராஜமௌலி, பிரியங்கா சோப்ரா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா?
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படம், டைட்டில் டீசர் வெளியீட்டுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.
25
மகேஷ் பாபுவின் கம்பீரமான தோற்றம்
மகேஷ் பாபுவின் கம்பீரமான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்தாலும், இந்தப் படத்தின் ரூ.1200 முதல் ரூ.1500 கோடி வரையிலான பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. படத்தின் முக்கியக் கலைஞர்கள் சம்பளமாகப் பெறும் தொகை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே: மகேஷ் பாபு: கதாநாயகனாக நடிக்கும் இவர், சுமார் ரூ.100 கோடி சம்பளமாகப் பெறுகிறார்.
35
நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள்:
ராஜமௌலி: இயக்குநரான இவர் சம்பளத்திற்குப் பதிலாக, படத்தின் மொத்த லாபத்தில் பங்கு பெறுகிறார். இந்தப் பங்கு பல நூறு கோடிகளைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் ஸ்டார் பிரியங்கா சோப்ரா இப்படத்திற்காக ₹30 கோடி சம்பளம் பெறுகிறார். அவரது பாத்திரத்தின் முக்கியத்துவமே, வில்லனை விட அதிக சம்பளம் பெறக் காரணமாகும்.
45
பிருத்விராஜ் சுகுமாரன்:
வில்லனாக நடிக்கும் இவருக்கு ₹20 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. மாதவன்: நடிகர் மாதவன், மகேஷ் பாபுவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
55
பிரியங்கா சோப்ரா:
இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ராஜமௌலியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் படத்தின் லாபத்தில் பங்கு உள்ளது என்று தெரிகிறது. 'வாரணாசி'யின் பட்ஜெட் மற்றும் நட்சத்திர சம்பளங்கள், இது இந்தியத் திரையுலகின் மிக பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது