கார்த்திக்கின் நல்ல மனசை புரிந்து கொண்ட தீபாவதி – உண்மையை சொல்வாரா? மறைப்பாரா?

Published : Nov 20, 2025, 06:02 PM IST

Deepavati Realises Karthik Raja Good Intentions : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் யார் என்ற உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்வதற்கு முன்னதாக அவரது நல்ல மனதை தீபாவதி புரிந்து கொண்டுள்ளார்.

PREV
17
கார்த்திகை தீபம் 2

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்டவர் தான் தீபாவதி. தனது மாப்பிள்ளை யார், ராஜா சேதுபதியின் பேரன் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க சாமுண்டீஸ்வரியால் தீபாவதி நியமிக்கப்பட்டார். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது பாட்டியின் குடும்பமும், அத்தை சாமுண்டீஸ்வரியின் குடும்பமும் பிரிந்துவிடுகின்றனர்.

27
ரேவதி மற்றும் கார்த்திக்

அதன் பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக 2 குடும்பமும் ஒன்று சேரவில்லை. இதனால் கோயில் கும்பாபிஷேகமும் தடைபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரிந்திருந்த 2 குடும்பத்தையும் ஒன்று சேர்த்து நடக்காமல் இருந்த கோயில் கும்பாபிஷேகத்தை தனது மாமாவின் மூலமாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கார்த்திக் தனது அத்தையின் வீட்டில் டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.

37
கார்த்திகை தீபம் 2 சீரியல்

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது அத்தையின் மனதில் இடம் பிடித்து கடைசியின் அத்தையின் 2ஆவது மகளான ரேவதியை அவரது விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கார்த்திக் யார் என்ற உண்மையை புரிந்து கொண்ட ரேவதி அவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது மனைவி இறந்துவிட்டார் என்பதையும் தெரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்தார்.

47
கார்த்திக், ரேவதி,

ரேவதியின் காதலை கார்த்திக் ஏற்றுக் கொண்டார். பின்னர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கார்த்திக்கின் அம்மா விபத்தில் உயிரிழந்தார். அதனால் கும்பாபிஷேகம் தடைபட்ட நிலையில் இப்போது 2ஆவது முறையாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ராஜராஜன் சாமியாடி ஊரை வலம் வந்து விளக்கேற்றி வைத்து கும்பாபிஷேகத்திற்கு உத்தரவு கொடுத்துள்ளார்.

57
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு

இந்த நிலையில் தான் கார்த்திக் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க வந்த தீபாவதி கடுமையான போராட்டம் மற்றும் முயற்சிகளுக்கு பிறகு அவரைப் பற்றி தெரிந்து கொண்டார். பின்னர் தனது குழுவுடன் இணைந்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்ட பிறகு கார்த்திக் யார் என்ற உண்மையை சொல்வது தான் சரி என்பதை புரிந்து கொண்டு சாமுண்டீஸ்வரியை வரச் சொன்னார். அப்படி அவர் புறப்படும் போது பாம்பு கடித்து அவரால் வர முடியாத சூழல் ஏற்பட்டது.

67
கார்த்திகை தீபம் 2 சீரியல்

பின்னர் ராஜராஜன் மற்றும் கார்த்திக் ராஜா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்த தீபாவதி ராஜாவின் நல்ல மனதை புரிந்து கொண்டார். தனது அத்தையை இத்தனை நாட்களாக ஏமாற்றுவதால் அவரது மனசு கஷ்டப்படுவதையும் புரிந்து கொண்டார். இதனால் கோயில் கும்பாபிஷேகம் முடியும் வரையில் கார்த்திக் யார் என்ற உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77
தீபாவதி, சாமுண்டீஸ்வரி

கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கார்த்திக் தானாகவே தன்னைப் பற்றிய உண்மையை தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குள்ளாக சாமுண்டீஸ்வரி கார்த்திக் யார் என்ற உண்மையை தெரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories