மகள் வரலட்சுமி ஆசையை நிறைவேற்றிய அப்பா சரத்குமார்... வைரலாகும் புகைப்படம்..!

Published : Jul 26, 2021, 06:13 PM IST

நடிகர் சரத்குமார் திடீர் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரை தன்னுடைய இரு மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
14
மகள் வரலட்சுமி ஆசையை நிறைவேற்றிய அப்பா சரத்குமார்... வைரலாகும் புகைப்படம்..!
varalakshmi

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் அவனது கனவு படமான, ​கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுத்து வருகிறார்.  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைத்துள்ளனர்.

24
varalakshmi

தாய்லாந்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் வந்துள்ளார்.

34
varalakshmi

கிட்ட தட்ட இறுதி கட்டத்தை படப்பிடிப்பு நெருங்கி விட்ட போதிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, பிரபலங்கள் அனைவருமே நல்ல நட்புடன் பழகி வருகின்றனர். சமீபத்தில் கூட ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

44
varalakshmi

இதை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் தன்னுடைய இரண்டு மகள்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திடீர் என, ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரை சந்திக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரை வரலட்சுமி மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் சரத்குமாருடன் சென்று சந்தித்த புகைப்படங்களும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories