
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கு ஜோவிகா என்கிற மகளும் இருக்கிறார் அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனார். இந்த நிலையில் ஜோவிகா விஜயகுமார் தான் பிக்பாஸ் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஜோவிகாவின் அம்மா வனிதா தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார்.
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் வனிதா விஜயகுமார், ராபர்ட், ஜோவிகா மட்டுமின்றி இப்படத்தில் நடித்துள்ள ஷகீலா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை கிரண் ஆகியோரும் கலந்துகொண்டனர். இயக்குனர் வசந்த பாலனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த ஆடியோ லாஞ்சில் வனிதா பேசுகையில் தன் மகள் ஜோவிகா பிறந்த போது தான் எதிர்கொண்ட கஷ்டங்களை பகிர்ந்துகொண்டார்.
ஜோவிகா பிக் பாஸில் கலந்துகொண்டபோது அவரை விமர்சித்து பல்வேறு கமெண்டுகள் வரும். அப்படி அவர் பெயரின் பின்னால் தந்தை பெயரை போடாததால் அவரின் தந்தை யார் என்கிற பேச்சும் அந்த சமயத்தில் எழுந்தது. அப்போது இதுபற்றி அப்போது எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த வனிதா, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் ஆடியோ லாஞ்சில் முதன்முறையாக தன் மகளைப் பற்றி வந்த கமெண்ட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து பேசி உள்ளார்.
சோசியல் மீடியாவில் வரும் கமெண்டுகளை எல்லாம் படிப்பேன். ஆனால் கண்டுக்க மாட்டேன். ஜோவிகா பிக்பாஸில் இருந்தபோது அவர் பெயருக்கு பின் ஏன் விஜயகுமார் என்று கேட்டனர். அதற்கு இந்த மேடையில் பதிலளிக்கிறேன். இந்த படம் உருவானதற்கான கதையும் அதுதான். என் பெயர் வனிதா விஜயகுமார், இன்னைக்கு வரைக்கும் என்பெயரை மாற்றவில்லை. எனக்கு கல்யாணமாகி மகன் பிறந்து மூன்று ஆண்டுகள் ஆன பின்னர், என் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வந்தது.
அப்போதைய சூழலில் என்னால் இங்கு இருக்க முடியவில்லை. நான் எங்கு சென்றாலும் பிரச்சனையாகவே இருந்தது. என்னைப்பற்றி தப்பா பேசி என்னுடைய் குழந்தைகளின் தந்தை பிரச்சனை செய்தார். அவர் யார் என்பதை சொல்லமாட்டேன். ஜோவிகா என் வயிற்றில் இருக்கும்போது நான் இங்க இருக்க முடியாத சூழல் வந்தது. அப்போது என் அம்மா என்னை அமெரிக்காவுக்கு செல்லச் சொன்னார். நான் நிம்மதியா குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா தான் என்னை அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும்போது அம்மா கூட இருப்பதைவிட புருஷன் கூட இருக்கனும். ஆனா நான் தனியா கஷ்டப்பட்டேன். அமெரிக்காவில் குழந்தை பிறந்த உடனே அவர்களின் பெயரை சொல்ல வேண்டும். அப்போது என் கணவர் பெயரை நான் என் மகள் பெயருடன் சேர்க்க விரும்பவில்லை. நான் குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என்னுடைய அப்பாவின் பெயர் தான் அப்போது நியாபகத்துக்கு வந்தது. அதனால் ஜோவிகா விஜயகுமார் என பெயரிட்டதாக வனிதா கூறி உள்ளார்.