'பொன்னியின் செல்வன்' நாவலின் கதை ராஜ ராஜ சோழனான அருண்மொழி வர்மனை பற்றிய கதை என்றாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு தனித்துவமான கதாபாத்திரம் என்றால் அது கார்த்தி ஏற்று நடித்துள்ள வந்திய தேவன் கதாபாத்திரம் தான்.
ராஷ்ட்ர நாட்டை போரிட்டு வெல்வதற்கு கரிகாலனுக்கு உற்ற நண்பனாக தோள்கொடுத்து உதவி செய்வதில் இருந்து, கரிகாலனின் நம்பிக்கையை பெற்று... ஒரு ஒற்றனாக, பெரிய பழவேட்டையார் அரண்மனைக்குள்ளேயே புகுந்து, அங்கு நடக்கும் சதி திட்டத்தை தெரிந்து கொண்டு, சிக்கல் வரும் ஒவ்வொரு நிலையிலும் அதில் இருந்து சாமர்த்தியமாக வெளியே வருவது என அசாதாரண நடிப்பில் ஆச்சர்யமூட்டுகிறார் கார்த்தி.
மேலும் செய்திகள்: Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!
அழகு பதுமையாக நடித்துள்ள பெரிய பழுவேட்டையாரின் இளைய மனைவி நந்தினியின் அழகை அவருக்கு நேராகவே புகழ்ந்து இவர் பேசும் காட்சிகளில் எல்லாம் செம்ம கெத்துடா வந்திய தேவன் என தோன்ற வைக்கிறார்.
குந்தவையை முதல் பார்வையிலேயே கவர்ந்து விடும் வந்திய தேவன், பின்னர் அவருக்கும் ஒற்றனாக மாறி, பூங்குழலி படகில் இலங்கைக்கு செல்லும் போது கூட, அவரிடம் லவ் மூடில் பேசி வாங்கி கட்டி கொள்வது படு மாஸ்.
பொன்னியின் செல்வனுக்கு நம்பிக்கைக்கு உரியவராக மாறி, தன் உயிரையே கொடுக்க துணிந்த வந்திய தேவன்.... கடலில் விழுந்து உயிர் பெற்று வந்து என்னென்ன சாகசங்களை செய்வார் என அடுத்த பாகத்தில் தான் பார்க்க வேண்டும்.