நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீசான படம் கபாலி. கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருந்தார். கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மலேசிய டான் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், அவரின் மகள் கதாபாத்திரத்தில் நடிகை தன்ஷிகாவும் நடித்திருந்தார்.
இப்படம் ரிலீசான சமயத்தில் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த சம்பவங்களும் அரங்கேறின. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான கபாலி திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. சமீபத்திய பட விழா ஒன்றில் கூட கபாலி பட விமர்சனங்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... மணிரத்னம் நம்முடைய மிகப்பெரிய அடையாளம் - நடிகர் கார்த்தி எமோஷனல் பேச்சு
இந்நிலையில், தாணு தயாரித்துள்ள நானே வருவேன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தாணு தான் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அந்த வகையில் ஒரு பேட்டியில் அவரிடம் கபாலி படத்தின் மொத்த வசூல் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தாணு, அமெரிக்காவில் மட்டும் அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் அப்படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடிக்கு மேல் வரும். அவ்ளோ வசூல் செய்தது. வெளிநாட்டு வசூல் மூலம் மட்டுமே நிறைய வசூல் வந்தது என கூறி இருந்தார். அப்படம் ரிலீசான சமயத்தில் ரூ.650 முதல் ரூ.670 கோடி வசூலித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் ரூ.1000 கோடி வசூலித்ததாக கூறியதை கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய தனுஷின் நானே வருவேன்... முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?