பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய தனுஷின் நானே வருவேன்... முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

First Published | Sep 30, 2022, 10:44 AM IST

Naane varuven : பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படாமலே நானே வருவேன் திரைப்படம் அதிக அளவு வசூல் செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது மூன்றாவது முறையாக தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இப்படத்தை நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் நடிகர் தனுஷ், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்துஜாவும், எல்விரம்மும் நடித்துள்ளனர். நானே வருவேன் திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும், பெரிய அளவில் புரமோட் செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்... Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!

Tap to resize

இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்குமோ என்ற அச்சமும் இருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நேற்று இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.7.30 கோடி வசூலித்துள்ளதாம்.

பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படாமலே நானே வருவேன் திரைப்படம் இந்த அளவு வசூல் செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுவதால், நானே வருவேன் வசூல் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தேசிய விருது வாங்க குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் சூர்யா - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ

Latest Videos

click me!