மணிரத்னம் நம்முடைய மிகப்பெரிய அடையாளம் - நடிகர் கார்த்தி எமோஷனல் பேச்சு

First Published | Sep 30, 2022, 11:31 AM IST

பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக பல பேர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. அப்போது சென்னை, கேரளா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி என இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரமோட் செய்தனர்.

இறுதியாக சென்னையில் நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவம் பற்றியும் மணிரத்னம் பற்றியும் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய தனுஷின் நானே வருவேன்... முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

Tap to resize

அப்போது அவர் கூறியதாவது : பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக பல பேர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளிமாநிலத்தவர்களும் நம் தமிழரின் பெருமையை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நம் நாட்டில் முதல் பான் இந்திய திரைப்படத்தை கொடுத்தது மணி சார் தான். 

அதனால் தான் மணி சாரை இந்தியா முழுக்க தெரிகிறது. அவர் நம்முடைய பெரிய அடையாளமாகவும் திகழ்கிறார். மணி சாரும் ஏ.ஆர்.ரகுமானும் சேரும்போது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதேபோல் தான் வெளிமாநில ரசிகர்களும் இருக்கிறார்கள்" என்று கார்த்தி கூறினார். 

இதையும் படியுங்கள்... Ponniyin Selvan Review: 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனம் இதோ..!

Latest Videos

click me!