Overhyped Flop Movies : ரிலீசுக்கு முன் ஓவராக பில்டப் செய்யப்பட்டு, ரிலீஸ் ஆன பின் அட்டர் பிளாப் ஆன டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஓவர் பில்டப் உடம்புக்கும் ஆகாது என சொல்வார்கள். அந்த டயலாக்குக்கு ஏற்றார் போல் தமிழ் சினிமாவில் சில படங்கள் அட்டர் பிளாப் ஆகி உள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்னர் ஆஹா... ஓஹோனு பில்டப் பண்ணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து, பின்னர் படம் ரிலீஸ் ஆன பின்னர் செம அடிவாங்கிய படங்கள் சில இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ஐ. இப்பத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். ஷங்கர் - விக்ரம் கூட்டணி அந்நியன் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்த படம் இது என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்காக விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். டைட்டில் வித்தியாசமா இருக்கு, விஷுவல் வேறலெவலில் இருக்குனு ஓவர் ஹைப் ஏத்தினார்கள். ஆனால் தியேட்டரில் படத்தை பார்த்த பின்னர் தான் இதற்கா இவ்வளவு பில்டப்பு என எண்ண வைத்தது. படத்தின் கதை சொதப்பலாக இருந்ததால் இப்படம் பிளாப் ஆனது.
36
4. அஞ்சான்
சூர்யா - லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் அஞ்சான். இப்படம் ரிலீஸ் ஆகும் முன் இப்படத்தில் சூர்யாவின் கெட் அப் வேறலெவல் டிரெண்ட் ஆனது. இப்படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதற்கு லிங்குசாமி கொடுத்த ஒரு பேட்டியும் முக்கிய காரணம். அதில் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருப்பதாக அவர் சொன்னதைக் கேட்டு, தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது அஞ்சான். இதனால் அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் இப்படம் ட்ரோல் செய்யப்பட்டது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் லிங்கா. இவர்கள் கூட்டணியில் முத்து, படையப்பா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வந்திருந்ததால், லிங்கா படம் ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த் உடல்நலம், சரியில்லாமல் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பின் அவர் நடித்த முதல் படம் லிங்கா. அதனால் இதற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளை தவிர்த்து எதுவுமே ஒர்க் அவுட் ஆகாததால் லிங்கா பிளாப் ஆனது.
56
2. வலிமை
நடிகர் அஜித்குமாரின் கெரியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன படம் தான் வலிமை. எச்.வினோத் இயக்கிய இப்படம் ரிலீஸ் ஆகும் முன்னர் அதன் அப்டேட்டுக்காகவே ஃபேமஸ் ஆனது. படக்குழு அப்டேட்டே வெளியிடாமல் இருக்க, அஜித் ரசிகர்களோ, கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் தேர்தல் பிரச்சாரம் வரை செல்லும் இடம்மெல்லாம் அப்டேட் கேட்டு அலறவிட்டனர். தீரன் படத்தில் வருவதுபோல் ஒரு மாஸான பஸ் சேஸிங் காட்சி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஹைப் ஏத்தினார்கள். ஆனால் படமோ ரசிகர்களை திருப்தி படுத்தாமல் பிளாப் ஆனது.
66
1. கங்குவா
ஓவர் ஹைப்பால் ஓடாமல் போன படங்களின் பட்டியலில் கங்குவாவும் ஒன்று. இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதனை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் இதன் மேக்கிங் வீடியோ மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு, இப்படம் தமிழ் சினிமாவின் பாகுபலி என்றெல்லாம் பில்டப் விட்டார்கள். அதுமட்டுமின்றி இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இப்போ கொடுத்த பாஸை பத்திரமா வச்சிக்கோங்க, அடுத்த மாசம் சக்சஸ் மீட்டுக்கு தேவைப்படும் என்றெல்லாம் ஓவர் கான்ஃபிடண்டில் சொல்ல, படம் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு காதில் ரத்தம் வராத குறையாக கத்தியே கதறவிட்டது கங்குவா. இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தோல்விப் படங்களில் ஒன்று.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.