Jailer 2 : ஆளாளுக்கு சும்மா அடிச்சு விடுறாங்க... ஜெயிலர் 2 உண்மையான வசூல் இவ்வளவுதான்..!

Published : Oct 21, 2026, 08:03 PM IST

Jailer 2 Box Office : ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Jailer 2 Box Office Collection

தமிழ்நாட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் ஜெயிலர் 2 படம் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 திரைப்படம், எதிர்பார்த்தபடியே, நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை நன்கு பயன்படுத்திக் கொண்டது. இருப்பினும் சேலம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஷேர் பங்கீட்டு பிரச்சனை காரணமாக முதல் இரண்டு நாட்களுக்கு ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகவில்லை.

Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்

24
நான் ஸ்டாப்பாக ஓடும் ஜெயிலர் 2

இதன்பின்னர் படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது தெரிந்ததும், ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி தான் படத்தை அங்கு ரிலீஸ் செய்தார்களாம். ரெண்டு நாள் லேட்டாக ரிலீஸ் ஆனதால் அதில் தவறவிட்ட வசூலை ஈடுகட்ட நான் ஸ்டாப்பாக சில திரையரங்குகளில் ஜெயிலர் 2 திரைப்படம் திரையிடப்பட்டு வருவதாக வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் 2 படத்தின் வசூல் நிலவரத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறிய வலைப்பேச்சு பிஸ்மி அதன் உண்மையான வசூல் நிலவரத்தையும் போட்டுடைத்துள்ளார்.

Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!

34
ஜெயிலர் 2 ரியல் வசூல் எவ்வளவு?

அதன்படி ஜெயிலர் 2 திரைப்படம் 600 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுவதெல்லாம் உண்மையில்லை என கூறியுள்ள அவர், 6 நாட்கள் நிலவரப்படி அப்படம் உலகளவில் ரூ.470 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் அப்படம் ரூ.122 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். வருகிற வெள்ளிக் கிழமைக்குள் அப்படம் உலகளவில் 500 கோடி வசூலையும், தமிழ்நாட்டில் ரூ.155 கோடி வசூலையும் வாரிக் குவித்துவிடும் என கூறி இருக்கிறார். விரைவில் சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக பிஸ்மி கூறி உள்ளார்.

ஜனநாயகன் மொத்த வசூலை 3 நாளில் தட்டி தூக்கிய ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!

44
சன் பிக்சர்ஸ் சைலண்டாக இருப்பது ஏன்?

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான காரணத்தை பிஸ்மி கூறி உள்ளார். தற்போது அனிருத் - காவ்யா மாறன் திருமண பணிகளில் கலாநிதி மாறன் பிசியாக உள்ளாராம். அதனால் இந்த வசூல் நிலவரம் வெளியிடுவதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லையாம். அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பரில் நடைபெறுகிறது. இதையடுத்து சென்னையில் வருகிற நவம்பர் 21ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth: 75 வயசுலயும் இப்படி ஒரு எனர்ஜியா? 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories