ஒரு பாட்டுக்கு 500 ரூபா தான்... பேரம் பேசிய பாட்ஷா பட தயாரிப்பாளர் - வைரமுத்து செய்த தக் லைஃப் சம்பவம்

Published : Sep 21, 2024, 10:00 AM IST

Vairamuthu Salary for Baasha Movie : ரஜினிகாந்தின் பாட்ஷா படத்திற்காக தேவா இசையமைப்பில் பாட்டெழுத பாடலாசிரியர் வைரமுத்து வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
ஒரு பாட்டுக்கு 500 ரூபா தான்... பேரம் பேசிய பாட்ஷா பட தயாரிப்பாளர் - வைரமுத்து செய்த தக் லைஃப் சம்பவம்
Vairamuthu Salary for Baasha Movie

பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத வைரமுத்துவை அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் அழைத்திருக்கிறார். அப்போது அவரிடம் சம்பளம் பற்றி கேட்டபோது முழுப்படத்துக்கு பாட்டெழுத 50 ஆயிரம் வாங்குவதாக சொல்லி இருக்கிறார் வைரமுத்து. இதைக்கேட்டு அதிர்ச்சியான ஆர்.எம்.வீரப்பன் பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? என நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கி இருக்கிறார்

நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம் என ஆர்.எம்.வீரப்பன் சொல்ல, பதிலுக்கு வைரமுத்து, இப்போது நான் வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்க முடிவு’ என கூறி இருக்கிறார். 

24
Rajinikanth, Vairamuthu

உடனே ஆர்.எம்.வீரப்பன், பாடல் எழுதுங்கள்; அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்ல, எல்லாப் பாடலும் எழுதி முடித்த பின்னர் வைரமுத்துவுக்கு பேசிய சம்பளத்தைவிட 5 ஆயிரம் கம்மியாக கொடுத்திருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

வைரமுத்துவும் மேற்கொண்டு கேட்காமல் அதை பெற்றுக்கொண்டாராம். பின்னர் பாட்ஷா படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆன பின்னர் படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பரவலாக பேசப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து வைரமுத்து பாட்டெழுதிக்கொண்டிருந்த போது அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று அவரை பார்த்ததும் நின்று இருக்கிறது.

இதையும் படியுங்கள்... இதல்லவா காவியக் காதல்... மனைவிக்காக வாலி இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறாரா?

34
vairamuthu

பின்னர் காரில் இருந்து இறங்கி வந்தவர், ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீரப்பன் ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்று கூற, அதை ஏற்று வைரமுத்துவும் அங்கு சென்றிருக்கிறார். அப்போது ஆர்.எம்.வீரப்பன் கையில் ஓர் உறையை கொடுத்திருக்கிறார். ‘என்ன இது?’ என கேட்ட வைரமுத்துவிடம் நாங்கள் குறைத்த பணம் 5000 என்று சொல்லி இருக்கிறார் ஆர்.எம்.வீரப்பன். 

நன்றி சொல்லிவிட்டு அந்த பணத்தை பெற்றுக்கொண்ட வைரமுத்து அந்த பணத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். 

44
vairamuthu salary

ஏனெனில் பாட்ஷா பட பாடல்களில் வைரமுத்து எழுதிய ஆட்டோக்காரன் பாடலும் ஒன்று. அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால் அவர்களுக்கு அன்பளிப்பாக அந்த பணத்தை கொடுத்திருக்கிறார் வைரமுத்து. இந்த சம்பவத்தை தற்போது நினைவுகூர்ந்துள்ள வைரமுத்து, தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று இதன்மூலம் கருதிக்கொண்டேன் என சொல்லி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சகுனிகள் இருக்கும் இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பொழச்சுக்க முடியாது - ரஜினிகாந்த் ஸ்பீச் ஹைலைட்ஸ்

click me!

Recommended Stories