இதல்லவா காவியக் காதல்... மனைவிக்காக வாலி இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறாரா?

First Published | Sep 21, 2024, 9:27 AM IST

Lyricist Vaali Song Secret : மனைவி மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக வாலிப கவிஞர் வாலி எழுதிய சூப்பர்ஹிட் பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vaali wife Ramana Thilagam

கவிஞர் வாலி கடந்த 1965-ம் அண்டு திருமணம் செய்துகொண்டார். ரமண திலகம் என்கிற நடிகையை தான் அவர் கரம்பிடித்தார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். வாலி காதலிக்கும்போது தொடங்கி, மனைவி இறந்த பின்னர் வரை அவர்மீதுள்ள காதலை தன்னுடைய பாடல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படி காதல் மனைவிக்காக வாலி எழுதிய பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கவிஞர் வாலி பாடல் எழுதுவது மட்டுமின்றி, நாடகங்களுக்கு கதை, வசனமும் எழுதி இருக்கிறார். அவரது வீட்டில் வைத்து தான் நாடகத்திற்கான ஒத்திகை நடக்குமார். அப்படி 1965-ம் ஆண்டு ஒரு நாடக ஒத்திகைக்காக அனைவரும் வந்தபோது திடீரென நாடகத்தை நிறுத்தி இருக்கிறார் வாலி. ஏன் என்று அனைவரும் கேட்க, இந்த நாடகத்தில் கதாநாயகியாக ரமண திலகம் நடிக்க மாட்டார் என சொல்லி இருக்கிறார். ஏன் என்று கேட்டபோது, நான் அவங்கள கல்யாணம் பண்ணிக்க போகிறேன் என சொல்லி இருக்கிறார் வாலி.

Vaali, MGR,

அந்த சமயத்தில் ரமண திலகத்தின் மீதிருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக வாலி எழுதிய முதல் பாடல் தான் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா’ பாட்டு. பாடல் ஹிட் ஆனதுபோல் அந்த ஆண்டே வாலியின் காதலும் சக்சஸ் ஆகி அவர் தன்னுடைய மனைவியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் வாலியில் இந்த திடீர் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

வாலி திருமணம் செய்துகொண்டது சினிமாவில் யாருக்குமே தெரியாதாம். மறுநாள் பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் அனைவருக்குமே செய்தி தெரிந்திருக்கிறது. அப்போது வாலி மீது செம்ம கோபத்தில் இருந்தாராம் எம்.ஜி.ஆர். அந்த கோபத்தின் காரணமாக அவருக்கு பாடல் வாய்ப்புகளையும் வழங்க மறுத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படியுங்கள்... சகுனிகள் இருக்கும் இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பொழச்சுக்க முடியாது - ரஜினிகாந்த் ஸ்பீச் ஹைலைட்ஸ்

Latest Videos


onakkaga poranthene song

இதையடுத்து வாலியின் மனைவி ரமண திலகம் கடந்த 2012-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த பிறகு அவரின் நினைவாக வாலி சில பாடல்களை எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடல் தான் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இடம்பெறும் உனக்காக பொறந்தேனே எனதழகா பாட்டு. மனைவி இல்லாத போது அவரின் அருமை தெரியும் என சொல்வார்கள் என்பதற்கு ஏற்ப அந்த பாடலில் வயதான காலத்தில் கணவன், மனைவி காதலித்தால் எப்படி இருக்கும் என்பதை தன்னுடைய பாடல் வரிகளால் அழகாக வர்ணித்து இருப்பார் வாலி.

Maryan - Naetru Aval Irundhal Song

இதேபோல் அவர் மனைவியின் நினைவாக எழுதிய கடைசி பாடல் தான் மரியான் படத்தில் இடம்பெறும் ‘நேற்று அவள் இருந்தாள், அவளோடு நானும் இருந்தேன்’ பாட்டு. இந்த பாடலில் இறந்த தன் மனைவி மீதுள்ள காதலை சொல்லி இருப்பார் வாலி. இந்த படம் ரிலீஸ் ஆன மறுதினமே வாலி இறந்துவிட்டார். அவர் இறந்தாலும் அவருடைய பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

இதையும் படியுங்கள்... "இத்தனை வருஷமா ஏன் புகார் கொடுக்கல? எல்லாம் சதி" - உச்சகட்ட கோபத்தில் ஜானி மாஸ்டர் மனைவி!

click me!