அரபிக் இதிகாசத்தில் உள்ள காதலின் 7 நிலையை ஒரே பாட்டில் கூறிய வைரமுத்து!

Published : Oct 15, 2024, 05:58 PM ISTUpdated : Oct 15, 2024, 06:02 PM IST

ஆயிரம் பாடலாசிரியர்கள் வந்தாலும், அவர்களில் என்றும் தனித்து தெரியும் கவிஞர்கள் ஒருசிலரே... அவர்களில் கண்ணதாசன் மற்றும் வாலிக்கு அடுத்தபடியாக உள்ளவர் தான் வைரமுத்து.  

PREV
14
அரபிக் இதிகாசத்தில் உள்ள காதலின் 7 நிலையை ஒரே பாட்டில் கூறிய வைரமுத்து!
Vairamuthu Songs

கவித்துவமான பாடல்கள் முதல், இளசுகள் மனம் கவர்ந்த ஏராளமான பாடல்களை தற்போதும் எழுதி கொண்டிருப்பவர் வைரமுத்து. இவரை பற்றிய சில சர்ச்சைகள் தமிழ் திரையுலகில் வட்டமடித்து வந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒவ்வொரு பாடலாரிசியர்களுக்குமே ஒரு தனி ஸ்டைல் உண்டு. அந்த வகையில் வைரமுத்து ஒரு பாலுக்காக பல ஆய்வுகள் செய்து தான் அந்த பாடலை கூட எழுதுவார். இதற்க்கு பல உதாரணங்கள் உள்ளது. அப்படி வைரமுத்து மிகவும் ஆராய்ந்து, எழுதிய பாடல் தான் காதலை பற்றி ஏழு நிலைகளை கூறிய சூப்பர் ஹிட் பாடல்.

24
Vairamuthu Song in Maniratnam Movie

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான், மனிஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'உயிரே'. இந்த படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே கடை கோடி ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.

மணிரத்னம் படம் முதல்... தளபதிக்கு ஜோடியாகும் வாய்ப்பு வரை 5 படங்களை மிஸ் செய்த சாய் பல்லவி!
 

34
Shah Rukh Khan Uyire Movie

இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில், வைரமுத்து வரிகளில் இடம்பெற்ற பாடல் 'என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே' பாடல். இந்த பாடல் வரிகளில் காதலில் உள்ள "மொத்தம் ஏழு நிலையை தான் கூறி இருப்பர் வைரமுத்து". அதாவது அரபிக் இதிகாசங்களில் காதலை ஏழு நிலையாக பிரித்து...  Hub, Unf, Ishq, Aqeedat, Ibadat, Junoon, Maut, என கூறி இருப்பார்கள் இதை தான் வைரமுத்து பாடலில் கூறியுள்ளார்.

44
Vairamuthu about 7 stages of Love

இதன் அர்த்தம் ஈர்ப்பு, மோகம், காதல், பற்று, பரிபாடு, பித்து, மரணம், என்பது. இதை பாட்டின் ஆரம்பத்தில் கூட, "ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை.. இது எந்த நிலை என்று தோன்ற வில்லை" என கூறி மொத்த பாடலையும் விளக்கி இருப்பார். நீங்கள் இந்த பாடலில் உள்ள வரிகளை உற்று நோக்கினால்... இந்த பாடலின் மொத்த கதையையும் வைரமுத்து ரிவீல் செய்தது உணர முடியும்.

பாக்யராஜ் மகள் சரண்யாவுக்கு குழந்தை இருக்கா; கணவர் யார்? கொண்டாட்டத்தில் இருக்கும் குடும்பத்தினர்!
 

Read more Photos on
click me!

Recommended Stories