மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களையும் அதிகம் கவர்ந்த திரைப்படம் 'பிரேமம்'. இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த நிலையில், சாய் பல்லவி அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
கிட்டதட்ட தமிழில், இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தின் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், ரூ.4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.73 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. இந்த படத்தில் சாய் பல்லவி உட்பட மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும், சாய் பல்லவியின் மலர் டீச்சர் ரோல் தான் அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்த படத்தின் மூலம் அறிமுகமான 3 நடிகைகளுமே தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக சாய் பல்லவி தான் பல முன்னணி நடிகர்கள் ஜோடி போட விரும்பும் நடிகையாக உள்ளார். இப்படி பல வாய்ப்புகள் தன்னை தேடி வருவதன் காரணமாகவே சாய் பல்லவி, ஒரு சில காரணங்களால் ஐந்து முக்கிய படங்களின் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.