சிறுத்தை சிவா தம்பி பாலாவை சிறையில் தள்ளியவர்; யார் இந்த அம்ருதா சுரேஷ்?

First Published | Oct 15, 2024, 3:10 PM IST

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் பிரபல மலையாள நடிகருமான பாலா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அம்ருதா சுரேஷ் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Siruthai Siva Brother Bala

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற ப்ல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. இவரது உடன் பிறந்த சகோதரர் தான் பாலா. மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் பாலா, தமிழிலும் வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். பாலாவின் மீது அவரது முன்னாள் மனைவி மற்றும் பாடகியுமான அம்ருதா சுரேஷ் அளித்த புகாரின் பேரில், நடிகர் பாலா நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார். அமிருதாவை பாலா பலமுறை தவறாக நடத்தியதாக ஓட்டுநர் அளித்த சாட்சியின் பேரில் பாலா கைது செய்யப்பட்டு உள்ளார்.

Amrutha Suresh

பாடகி அமிருதா சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கடவந்தரா காவல்துறையினர் பாலாவை கைது செய்தனர். பாலா தனது 12 வயது மகள் அவந்திகா மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் கூட தன்னை "பல முறை" தவறாக நடத்தியதாகவும் அம்ருதா சுரேஷ் அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

Tap to resize

Singer Amrutha Suresh

அமிருதா ஒரு மலையாள பாடகி, 2007 இல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஐடியா ஸ்டார் சிங்கர் சீசன் 2 இல் தோன்றிய பிறகு பிரபலமானார். அவர் தனது முன்னாள் கணவர் பாலாவை 2009 ஆம் ஆண்டு வெனல்மரம் படத்தின் செட்டில் சந்தித்தார், அதில் அவர் பின்னணி பாடகியாக பணியாற்றி இருந்தார்..

இதையும் படியுங்கள்... முன்னாள் மனைவி கொடுத்த அதிரடி புகார்; நடிகர் பாலா கைது

Bala Ex Wife Amrutha Suresh

ஐடியல் ஸ்டார் சிங்கர் சீசன் 2 இல் அவர் இருந்த காலத்தில் அவர்களின் உறவு காதலாக மாறியது. அமிர்தா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க, அதே நேரத்தில் பாலா அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இந்த ஜோடி 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டது மற்றும் 2015 இல் பிரிந்தது. பின்னர் 2019 இல், அமிருதா-பாலா முறையாக விவாகரத்து செய்தனர். இந்த ஜோடிக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.

Amrutha Suresh Daughter

இந்திய பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் ரேடியோ டிஜே என பன்முகத்திறமையாளராக உள்ள அமிர்தா சுரேஷ், ஆகஸ்ட் 2, 1988 இல் பிறந்தார். அவர் ஒரு இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாடுவதோடு மட்டுமல்லாமல், அமிருதா மாடலிங் செய்கிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அம்ருதாவுக்கு 17 லட்சம் பாலோவர்களும் உள்ளனர். மே 2022 இல், அமிருதா பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலிப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அவர்கள் இருவரும் பின்னர் பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... 12 வயது மகளின் குற்றச்சாட்டு; 'இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்' கூனி குறுகிய நடிகர் பாலா!

Latest Videos

click me!