தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் (naaisekar returns) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு உடன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், ராமர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.