Kacha Badam : யார் கண்ணு பட்டுச்சோ.. விபத்தில் சிக்கிய ‘கச்சா பாதாம்’ பாடகர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Ganesh A   | Asianet News
Published : Mar 01, 2022, 11:20 AM IST

Kacha Badam Singer Accident: விபத்தில் படுகாயம் அடைந்த பூபன் பட்யகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

PREV
15
Kacha Badam : யார் கண்ணு பட்டுச்சோ.. விபத்தில் சிக்கிய ‘கச்சா பாதாம்’ பாடகர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் இந்த கச்சாபாதம் பாடலை அறிமுகம் செய்துவைத்துள்ளார். என்னது,  பாதாம் விற்கும் வியாபாரியா? என்று தானே யோசிக்கிறீங்க..ஆம், அவர் தனது பாதாமை விற்பதற்காக வித்தியாசமான பாட்டு பாடியுள்ளார்.

25

இதையடுத்து, அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் இணையத்தில் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடலை கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 

35

சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே இந்த கச்சா பாதாம்  என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

45

கச்சா பாதாம் பாடல் மூலம் பிரபலமான பூபன் பட்யகர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார் ஒன்றை வாங்கி உள்ளார். தனது சொந்த ஊரில் அந்த காரை ஓட்டி பழகி வந்த இவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். 

55

இதையடுத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபன் பட்யகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Adipurush release date : சிவராத்திரி ஸ்பெஷல் அப்டேட்.. ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்

click me!

Recommended Stories