Vaali Song
சுவாரஸ்யமான மற்றும் சவாலான பாடல்களை கூட... அசாத்தியமாக எழுதி ரசிகர்களை அசர வைத்தவர் தான் வாலி. இவர் காலத்தால் அழியாத பல பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த வள்ளல் என்று கூட கூறலாம். 70-களில் இருந்தே இவர் பாடல்கள் எழுதி வந்தாலும், இளைய தலைமுறை ரசிகர்களை கவரும் விதத்தில் பாடல்கள் எழுத கூடியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் துவங்கி... ரஜினி, கமல், விஜய், அஜித் என ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள வாலி உதடு ஒட்டாத வார்த்தைகளை கொண்டு ஒரு பாடல் எழுதி ஆச்சர்யப்படுத்தியவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
Villu Paatukkaran
இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் ஹீரோவாக நடித்து 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வில்லு பாட்டுக்காரன்'. இந்த படத்தில் ஹீரோயினாக ராணி நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சந்திரசேகர், எம்.என்.நம்பியார், செந்தில், கவுண்டமணி, ஷண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா இசையமைக்கும் பெரும்பாலான படங்களுக்கு வாலி தான் பாடல் எழுதுவது வழக்கம் அந்த வகையில், இளையராஜாவுக்காக உதடு ஒட்டாத வார்த்தைகளை கொண்டு சில மணிநேரங்களில் இந்த பாடலை எழுதி அசத்தினாராம் வாலி.
விஜய்யின் ஃபிட்னஸ் சீக்ரெட்; டயட் மற்றும் விரும்பி சாப்பிடும் உணவு!
Ilayaraja Music
இளையராஜா மதியம் ஒரு பாடல் ரெகார்ட் செய்ய வேண்டும் என கூறி வாலியை வர வழைத்துள்ளார். 12 மணிக்கு மேல் தான் வாலி ஸ்டுடியோவுக்கு சென்றாராம். அப்போது கங்கை அமரன் இயக்கி வரும் வில்லுபாட்டுக்காரன் படத்திற்கு, 2 மணிக்குள் ஒரு பாடலை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என ராஜா கூறிய நிலையில்... வழக்கமான பாடல்களை போல் இல்லாமல், இல்ல பாடல் உதடு ஒட்டாத வார்த்தைகளை கொண்டு எழுத வேண்டும் என கூறியுள்ளார். இது மிகப்பெரிய சவால் என்றாலும் சில மணி நேரத்தில்...
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே.... என்கிற பாடலை எழுதி கொடுத்துள்ளார்.
Non-sticky lip song
இத பாடலில், கலைவாணர் என்கிற வார்த்தையை வாலி பயன்படுத்திய போது... அதில் 'வா' வருகிறது அது பரவாயில்லை ஆஃப் லிப் தானே என ராஜா சொல்லியபோதும், கூடவே கூடாதுன்னு சொல்லி, கலைவாணருக்கு பதில் என் எஸ் கிருஷ்ணன் என்று அந்த வார்த்தையை மாற்றினாராம். இந்த தகவலை, வாலியே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பாடலை, மலேசியா வாசுதேவன் பாடி இருந்தார். இதுவரை எந்த ஒரு மொழியிலும் இது போல் உதடு ஒட்டாத பாடல்களை எந்த ஒரு கவிஞரும் எழுதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Tamil Season 8: ரஜினியின் சிபாரிசு? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பிரபல காமெடி நடிகரின் மகன்!