14 நாட்களில் OTTக்கு வந்த வா வாத்தியார்... தியேட்டரில் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : Jan 28, 2026, 01:07 PM IST

கார்த்தி நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த வா வாத்தியார் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 14 நாட்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
Vaa Vaathiyaar OTT Release

தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர் கார்த்தி. அவரின் இந்த முயற்சி அவருக்கு பல முறை கைகொடுத்திருந்தாலும் சில நேரங்களில் காலையும் வாரிவிட்டிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் இந்த ஆண்டு பொங்கலுக்கும் நடந்திருக்கிறது. நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் இருந்து விஜய்யின் ஜனநாயகன் படம் விலகியதை அறிந்ததும், உடனடியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. பராசக்தி கலவையான விமர்சனங்களை பெற்றதால் வா வாத்தியார் பொங்கல் வின்னராக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

24
சொதப்பிய வா வாத்தியார்

ஆனால் ரசிகர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக வா வாத்தியார் படத்தின் ரிசல்ட் அமைந்தது. ரிலீசுக்கு முன்பே இது என்னுடைய ஃபேன்ஸுக்கான படம் கிடையாது என நலன் குமாரசாமி சொல்லி இருந்தார். அதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்திருக்க வேண்டும் என படம் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் புலம்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு படு மோசமான விமர்சனங்களை வா வாத்தியார் பெற்றது. கதை வித்தியாசமானதாக இருந்தாலும் அதற்கு தீனிபோடும் வகையில் திரைக்கதை இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

34
வா வாத்தியார் பட்ஜெட்

இந்த ஃபேண்டஸி படம் மூலம் நலன் குமாரசாமி செய்த ஒரே ஒரு நல்ல விஷயம், இப்படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களை திருப்திப் படுத்தி இருக்கிறார். ஜப்பானுக்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக வா வாத்தியார் அமைந்துள்ளது. இப்படத்தை 40 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார் ஞானவேல் ராஜா. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அவர் தமிழில் அறிமுகமாகி உள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அவரும் இந்த படத்தில் சொதப்பி இருக்கிறார்.

44
வா வாத்தியார் வசூல்

இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 14 நாட்களில் ஓடிடிக்கு வந்துள்ளது. அப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஓடிடியில் ரிலீஸ் ஆனதால் தியேட்டரில் இருந்து ஒட்டுமொத்தமாக தூக்கப்பட்டுள்ள வா வாத்தியார் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. அப்படம் உலகளவில் 15 கோடி கூட வசூலிக்கவில்லை. அதன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெறும் ரூ.8.51 கோடி தானாம். வா வாத்தியார் தோல்வியால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி. அவர் கைவசம் சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்கள் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories