தென்னிந்திய மொழிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஊர்வசி. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பிறந்த, நடிகை ஊர்வசியின் நிஜ பெயர் கவிதா ரஞ்சனி. சினிமாவுக்கு வந்த பின்னர், ஊர்வசி என மாற்றிக்கொண்டார். 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கதிர் மண்டபம்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஊர்வசி அறிமுகமானார். அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த போது, தமிழில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
24
Busy Heroine in 90's
அந்த வகையில் பாக்யராஜ் இயக்கி நடித்து, 1984-ஆம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு' படத்தில் பரிமளம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தான் பாக்யராஜுக்கு, முருங்கைக்காய் நாயகன் என பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், என அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 15 படங்கள் ரிலீஸ் ஆனது.
பின்னர் மலையாள திரையுலகிலும் ஊர்வசி கவனம் செலுத்த தொடங்கியதால், தமிழில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்தார். தமிழ், மலையாளத்தை தவிர கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே, மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 8 வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். முதல் கணவர் மனோஜ் மூலம் இவருக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு சிவப்பிரசாத் என்கிற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் மகன் ஒருவரையும் பெற்றெடுத்தார் ஊர்வசி.
44
Urvashi Got 6 National Award
இன்று தன்னுடைய 56-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஊர்வசியின் சாதனை பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் இதுவரை தேசிய விருது உட்பட பல மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளனர் தான் ஊர்வசி. குறிப்பாக, கேரள மாநில அரசின் விருதை 6 முறை வாங்கி சாதனை செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு நடியையும் 6 முறை கேரள அரசின் விருதை பெற்றது இல்லை. அதே போல் 1989 முதல் 1991 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக மூன்று கேரள மாநில அரசு விருதுகளைவென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.