மனோபாலா அன்று சொன்ன வார்த்தை; இப்ப வரைக்கும் மறக்க முடியல! சுந்தர் சி உருக்கம்!

Web Team   | AFP
Published : Jan 25, 2025, 04:07 PM ISTUpdated : Jan 25, 2025, 04:27 PM IST

12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மனோபாலாவின் கடைசி படமாக இது அமைந்துள்ளது.

PREV
14
மனோபாலா அன்று சொன்ன வார்த்தை; இப்ப வரைக்கும் மறக்க முடியல! சுந்தர் சி உருக்கம்!
Madha Gaja Raja

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மதகஜராஜா 12 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் ரிலீஸாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த படம் நிதி பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் ரிலீஸ் தள்ளி போய்க் கொண்டே இருந்தது.

ஒரு வழியாக இந்த படம் பொங்கலுக்கு வெளியானது. படம் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.  ஆனால், படம் வெளியானது முதலே இந்த படம் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக சந்தானத்தின் டைமிங் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து.

24
Madha Gaja Raja

சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டாலும், அவரின் காமெடியை தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பது மதகஜராஜா படத்தின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. 

அதேபோல, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு என மறைந்த நடிகர்களை திரையில் பார்த்ததையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக மனோபாலா, மணிவண்ணன் இரண்டு பேரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மனோபாலா மறைவுக்கு பின், அவரின் கடைசி படமாக மதகஜ ராஜா படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் 2-ம் பாதியில் மனோபாலா சுமார் 15 நிமிட காட்சியில் வயிறு வலிக்க சிரிக்க வைத்துக் கொண்டே உள்ளாரம். மேலும் இந்த படம் ரிலீஸானால் நான் வேற லெவலுக்கு போய்விடுவேன் என்று சுந்தர் சி யிடம் சொல்லிக் கொண்டே இருந்தாராம் மனோபாலா.

34
Madha Gaja Raja

முன்னதாக அரண்மனை ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட போது மனோபாலா பற்றி சுந்தர் சி உருக்கமாக பேசியிருந்தார். அப்போது “ அரண்மனை 4 படத்துக்கு மனோபாலா மிகப்பெரிய இழப்புதான். இந்த படத்தில் அவருக்கென ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. ஒரு சில நாட்களில் மனோபாலா தொடர்பான காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தோம்.

அப்போது தான் மனோபாலாவிடம் ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அதில்  " நான் மருத்துவமன்பையில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. எனவே இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது. அதனால் எனக்கு பதில் அரண்மனை 4 வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்" என அவர் கூறியிருந்தார்..

44
Sundar C

சினிமாவில் எனது ஆரம்ப காலத்தில் இருந்தே மனோபாலா என்னுடன் நெருக்கமாக இருந்தார். என்னை வாடா, போடா என்று கூப்பிடும் சில நபர்களில் அவரும் ஒருவர். அரண்மனை 4 படத்தில் நடிக்காதது குறித்து என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு உடனே ஃபோன் செய்து "விடுங்க சார், இந்த ஒரு படம் தானே அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

ஆனால் அவரோ  'இல்லடா ரொம்ப நாள் நான் இருக்க மாட்டேன்" என்றார்.. இப்போது வரை அவர் சொன்னதை என்னால் மறக்க முடியவில்லை என்று” சுந்தர் சி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories