நேஷனல் கிரஷ் என்று கருதப்படும் ரஷ்மிகா மந்தனா பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். அவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த அனிமல் படம் நல்ல வரவேற்பை பெற்றது.. இப்போது 'சாவா' படத்தில் விக்கி கௌஷலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி நடிக்க, சாம்பாஜியின் மனைவி மகாராணி யேசுபாயாக ரஷ்மிகா நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ரஷ்மிகா, "தென்னிந்தியாவிலிருந்து வந்து மகாராணி யேசுபாய் வேடத்தில் நடித்திருக்கிறேன். இது என் வாழ்க்கையில் நான் செய்த மிகவும் சிறப்புமிக்க கேரக்டர். இந்தப் படத்திற்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று இயக்குனர் லக்ஷ்மனிடம் சொன்னேன்" என்று கூறியுள்ளார். '
சாவா' டிரெய்லர் என்னை ஈர்த்தது. விக்கி கௌஷல் கடவுள் போல இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.