40களை கடந்த ஆன்ட்டி நடிகைகள்.. இன்னும் சிங்குளாக கெத்து காட்டும் ஹீரோயின்ஸ்

Kanmani P   | Asianet News
Published : Mar 14, 2022, 05:53 PM ISTUpdated : Mar 14, 2022, 05:55 PM IST

கனவு கன்னியாக இருந்துவரும் நடிகைகள் பலரும் 40 களை கடந்து விட்டனர். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஜகா வாங்கி வருகின்றனர்.

PREV
18
40களை கடந்த ஆன்ட்டி நடிகைகள்.. இன்னும் சிங்குளாக கெத்து காட்டும் ஹீரோயின்ஸ்
Anushka shetty

அனுஷ்கா ஷெட்டி :

தமிழில் முன்னணி ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என ஜோடி போட்டவர்  அனுஷ்கா (Anushka). தெலுங்கில் முன்னணி நயகியாக வலம் வரும் அனுஷ்கா இறுதியாக பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில்  தேவசேனாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார். பின்னர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 40 வயதை தொட்டுள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
 

28
Trisha

நடிகை த்ரிஷா :

விஜய், அஜித், சூர்யா என ஜோடி போட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பவர் த்ரிஷா.  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் கவர்ந்த த்ரிஷா  1999-ல் மிஸ் சென்னை போட்டியில் மகுடம் வென்றவர். கடந்த 2015 அன்று த்ரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அதே ஆண்டு நிச்சயதார்த்தத்தோடு திருமணம் நின்று விட்டதாக த்ரிஷா அறிவித்தார்.முடித்துக்கொண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

38
Kovai Sarala

நடிகை கோவை சரளா : 

கோவையில் பிறந்த சரளா தன்னுடைய நடிப்பால் பலருமறியும் நகைசுவை நாயகியாக உயர்ந்தவர். 1979 -ல் என்ட்ரி கொடுத்த கோவை சரளா 1995-ல் கமலுடன் ஜோடியாக சதீ லீலாவதி படத்தில் அசத்தி இருந்தார். தற்போது அரசியல், படங்கள் என பன்முகம் காட்டி வரும் சரளா சமீபத்தில் பேய் மாமா படத்தில் நடித்திருந்தார். வயதுகள் கடந்து திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

48
Sushmita Sen

நடிகை சுஷ்மிதா சென் : 

1994 -ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற நடிகை சுஷ்மிதா சென்.  2016 -ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் நடுவராக நடிப்பெற்றார். சுஷ்மிதா சென் மற்றும் ரோஹ்மன் ஷால் 2018 முதல் 2021 வரை உறவில் இருந்தனர். பின்னர் உறவை முறித்துக்கொண்ட இவர் 2000 ஆம் ஆண்டில் ரெனி என்ற பெண் குழந்தையையும், 2010 ஆம் ஆண்டில் அலிசா என்ற இரண்டாவது பெண்ணையும் தத்தெடுத்தார்.

58
Shobana

நடிகை ஷோபனா :

பரதநாட்டிய நடனக் கலைஞரான ஷோபனா ஹிந்தி , கன்னடம் மற்றும் ஆங்கில, தெலுங்கு மற்றும் தமிழ்,  மலையாள படங்களில் நடித்துள்ளார்.  இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் , ஒரு கேரள மாநில திரைப்பட விருதுகள் , இரண்டு தென்னிந்திய திரைப்பட விருதுகள், இரண்டு தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகைக்கான 14 பரிந்துரைகள், 2011 இல் தமிழ்நாடு மாநில கலைமாமணி கௌரவ விருது என பல விருதுகளை வென்றுள்ளார். சுயபர் ஸ்டாருடன் சிவா, தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருந்தார் ஷோபனா. 50 களை கடந்த இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

68
Nagma

நடிகை நக்மா :

90 களில் ரசிகர்களின் மனதை ஈர்த்து வந்த நக்மா. அன்றைய நடிகைகளுக்கு டப் கொடுத்து வந்த நக்மா.. ஜோதிகாவின் சகோதரி ஆவார். பிரபு தேவாவுடன் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் மேட்டுக்குடி, தீனா  உள்ளிட்ட படங்களில் நாயகியாக வந்து அசத்திய இவர் சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படங்களை அடுத்து அரசியலில் பிஸியாக உள்ள நக்மா 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  

78
Kausalya

நடிகை கௌசல்யா :

முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா நேருக்குநேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி என ஹிட் படங்களில் நடித்துள்ளார். பூவேலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த கௌசல்யா 42 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

88
Tabu

நடிகை தபூ : 

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் கலக்கி வருகிறார். இவர் தமிழ் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஸ்நேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50 வயதை தொட்டுள்ள தபூ இன்னும் திருமணம் குறித்த முடிவெடுக்கவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories