செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்த தொடரின் மூலம் இளசுகளின் மனதில் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். ரத்ன குமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா.
இதையடுத்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்க்கு ஜோடியாக மாஃபியா, எஸ்.ஜே.சூர்யா உடன் மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மணப்பெண்ணே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, அதர்வா உடன் குருதி ஆட்டம், அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், தனுஷின் திருச்சிற்றம்பலம், லாரன்ஸ் உடன் ருத்ரன், அருண்விஜய்க்கு ஜோடியாக யானை, சிம்புவின் பத்து தல, ஜெயம் ரவியுடன் அகிலன் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.
இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனைப் பிடிக்க தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பிரியா.