மாமன்னனிடம் இருந்து வந்த மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்... என்ன உதயநிதி இப்படி சொல்லிட்டாரு?

First Published | Jul 13, 2023, 1:24 PM IST

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை ரிலீசுக்கு முன்பே பார்த்த உதயநிதி ஸ்டாலின் அப்படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாவீரன். இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சரிதா, அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன.

மாவீரன் திரைப்படம் பேண்டஸி கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இதில் கார்டூனிஸ்டாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதேபோல் அதிதி ஷங்கர் பத்திரிகையாளராகவும், மிஷ்கின் அரசியல்வாதியாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரிதா நடித்துள்ளார். அவர் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ள தமிழ் படம் இதுவாகும். அதேபோல் குக் வித் கோமாளி மோனிஷா இப்படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... வைரமுத்து வீட்டுக்கு சென்ற முதல்வர்... ஒரு பாலியல் குற்றவாளியை போய் கொண்டாடுறீங்களேனு வெளுத்துவாங்கிய சின்மயி

Tap to resize

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் வெளியிடுகிறது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவீரன் படத்தின் சிறப்பு காட்சி பார்த்த நடிகரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய விமர்சனத்தை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி மாவீரன் படம் சக்சஸ் ஆகும் என்பதை குறிக்கும் விதமாக இரண்டு தம்ப்ஸ் அப் எமோஜிகளை பதிவிட்டு, அதில் நடிகர் சிவகார்த்திகேயனையும் டேக் செய்துள்ளார். உதயநிதி எந்த ஒரு படமாக இருந்தாலும் அதன் விமர்சனத்தை வெளிப்படையாக கூறக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் அவர் கணித்த படங்கள் வெற்றியடைந்து உள்ளன. அந்த வகையில் மாவீரன் படத்திற்கும் அவர் பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால், இப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்ட இயக்குனரின் மகளுக்கு இவ்வளவு தான் சம்பளமா.... மாவீரனில் நடிக்க அதிதி வாங்கியது எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!