Aditi shankar
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ஷங்கர். இதனால் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அதிதி டாக்டர் படத்துவிட்டு சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிவிட்டார். கடந்தாண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே தனக்குள் இருக்கும் பாடும் திறனையும் வெளிப்படுத்திய அதிதி. அப்படத்தில் இடம்பெற்ற மதுரவீரன் என்கிற பாடலை யுவன் சங்கர் ராஜா உடன் இணைந்து பாடி அசத்தி இருந்தார். விருமன் படம் ரிலீசாகும் முன்பே அதிதிக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.
இதையும் படியுங்கள்... காஸ்ட்லியான சொகுசு கார் வாங்கிய குக் வித் கோமாளி சுனிதா... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Aditi shankar
மாவீரன் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் நாளை (ஜூலை 14) திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர். இந்நிலையில், மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி அவர் இப்படத்திற்காக ரூ.25 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Aditi shankar
பிரம்மாண்ட இயக்குனரின் மகளாக இருந்தாலும், அதைப்பயன்படுத்தி அதிக சம்பளம் கேட்காமல், வழக்கமாக இளம் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தையே அதிதி வாங்கி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மாவீரன் படத்துக்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அடுத்தடுத்த படங்களில் அதிதியின் சம்பளம் உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா பயங்கரமா அடிக்குறாங்க... உஷாரா இருந்துக்கோ! விக்னேஷ் சிவனை அலர்ட் பண்ணிய ஷாருக்கான்