இப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். ஏற்கனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர்கள் தற்போது 3வது முறையாக இணைந்துள்ளனர். நடிகர் ஜெகன், இப்படத்தில் சயின்டிஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.