நடிகர் கமல்ஹாசனின் ' விக்ரம் ' ஒரு வலுவான அதிரடி திரைப்படமாக, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மூன்றாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் ஆல் டைம் நம்பர் 1 தமிழ்ப் படம் என்பதை 'விக்ரம்' உறுதிப்படுத்தி இருப்பதாக கூறினார். .