விஜயகாந்தின் பகுதிகள் குறித்து இயக்குனரிடம் கேட்டபோது, “விஜயகாந்த் பகுதிகளை நாங்கள் இன்னும் படமாக்கவில்லை, மேலும் அவர் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதால் அவரது உடல்நிலை காரணமாக தாமதமாகிறது என கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியுடன் விஜய் மில்டன் இணைந்து ' மழை பிடிக்காத மனிதன் ' படத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் இறுதிகட்டத்தை படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதாகவும், பெரிய திரைகளுக்கு அவர் மீண்டும் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் படப்பிடிப்பை முடித்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் மில்டன். படத்தின் ரிசல்ட் குறித்தும், விஜய் ஆண்டனியுடன் இணைந்து படத்துக்காக பணியாற்றியது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
23
mazhai pidikatha manithan
விஜயகாந்தின் பகுதிகள் குறித்து இயக்குனரரிடம் கேட்டபோது, “விஜயகாந்த் பகுதிகளை நாங்கள் இன்னும் படமாக்கவில்லை, மேலும் அவர் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதால் அவரது உடல்நிலை காரணமாக தாமதமாகிறது. ஆனால் அவரையே வைத்து படமாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். படத்தின் அவரது இருப்பு மிகவும் அவசியமானது. ஆனால் அவர் படத்தில் தோன்றுகிறாரா அல்லது அவரது குரலில் தோன்றுகிறாரா என்பதை நாம் பொறுத்திருக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.
33
mazhai pidikatha manithan
'மழை பிடிக்காத மனிதன்' ஒரு தனித்துவமான திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தின் பெரும் பகுதிகள் டையூ மற்றும் டாமன் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு தீவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம். இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.