சூப்பர் ஸ்டாரை இயக்கும் நெல்சன் திலீப்குமார்...‘ஜெயிலர்’ படப்பிடிப்பு எப்ப இருந்து தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jun 18, 2022, 05:12 PM IST

 'ஜெயிலர் ' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள 'ரஜினி 169 '  படத்தின் முன்னெடுப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PREV
13
சூப்பர் ஸ்டாரை இயக்கும் நெல்சன் திலீப்குமார்...‘ஜெயிலர்’ படப்பிடிப்பு எப்ப இருந்து தெரியுமா?
jailer update

'கோலமாவு கோகிலா',  'டாக்டர்' சமீபத்தில் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் மூலம் தொடர் வெற்றிகளை பெற்ற இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வரவிருக்கும் படம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டதை அடுத்து , ' தலைவர் 169 ' என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்தது.  படத்திற்கு ஜெயிலர் ' என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

23
jailer update

இந்த படத்தின் நியூ அப்டேட் படி, ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. அங்கு ஒரு கும்பல் குழு பிரமாண்டமாக திட்டமிடுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனுபவம் வாய்ந்த ஜெயிலராக நடிக்கிறார். இப்படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

33
jailer update

நெல்சன் திலீப்குமாரின் 'பீஸ்ட் ' படத்தையும் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனை அணுகியுள்ளதாகவும் இப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்றும் செய்திகள் வந்த நிலையில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories