பிரமாண்ட ரிலீஸுக்கு ரெடியான..லெஜண்ட் சரவணனின் 'தி லெஜண்ட்' திரைப்படம்

Kanmani P   | Asianet News
Published : Jun 18, 2022, 02:35 PM IST

'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கோபுரம் பிலிம்ஸின் ஜிஎன் அன்பு செழியன் வாங்கியுள்ளார்.

PREV
13
பிரமாண்ட ரிலீஸுக்கு ரெடியான..லெஜண்ட் சரவணனின் 'தி லெஜண்ட்' திரைப்படம்
the legend

தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணனின் முதல் படமான 'தி லெஜண்ட்' ஜூலை மாதம் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஜேடி - ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும் இப்படத்தில் சரவணன் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக நடிக்கிறார்.

23
The Legend

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 'தி லெஜண்ட்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா மற்றும் கீதிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆல்பத்தின் மூலம் மீண்டும் வருகிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் 28 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இரண்டு பாடல்கள் யூடியூப்பில் 17 மற்றும் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.

33
the legend

இதற்கிடையில், 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கோபுரம் பிலிம்ஸின் ஜிஎன் அன்பு செழியன் வாங்கியுள்ளார். இப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், சுமன், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளார். இந்த படம் பிரமாண்டமாக வெளியாக ஆயத்தமாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பிரமாண்டமாக வெளியாக ஆயத்தமாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!

Recommended Stories