விஜய்க்கு சொந்தமான அலுவலகத்தில்...வாயில் பரோட்டாவுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் !

Published : Jun 18, 2022, 01:43 PM IST

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள பங்களாவில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
14
விஜய்க்கு சொந்தமான அலுவலகத்தில்...வாயில் பரோட்டாவுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் !
Thalapathy Vijay

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாக விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் விஜய் ரசிகர்கள் தேர்தல் களம் கண்டு வெற்றி  பெற்று வருகின்றனர். இந்த இயக்கத்திற்கான  சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பனையூரில் அலுவலகம் உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த வளாகத்தில் ஒருவர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

24
Thalapathy Vijay

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள பங்களாவில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் என்ற பெயின்டர் ஒரு மாதமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். புதன்கிழமை இரவு அவர் தனது குடும்பத்தினரை சில நாட்கள் சென்று பார்த்துவிட்டு குடிபோதையில் பரோட்டா வாங்க சூப்பர்வைசரிடம் நூறு ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

34
thalapathy vijay

மறுநாள் காலை 8 மணியளவில் அலுவலகத்தை திறந்த போது பிரபாகரன் வாயில் பரோட்டாவுடன் பிணமாக கிடந்தார். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற போலீசார், மதுபோதையில் கடின உணவை சாப்பிட முயன்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

44
thalapathy vijay

விஜய் தற்போது தனது 66 வது படத்தில் பிஸியாக இருக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைக்க, வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், இதில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பு, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories