கார்த்தியின் ‘சர்தார்’...அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா?

Published : Jun 18, 2022, 06:38 PM IST

படத்தின் க்ளைமாக்ஸ்  பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஷெட்யூல் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
13
கார்த்தியின் ‘சர்தார்’...அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா?
sardar update

பிரபல நடிகர் கார்த்தி கைதி, விருமன் படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் ' சர்தார் ' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் . தற்போது கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பு பாண்டிச்சேரிக்கு நகர்வதாக லேட்டஸ்ட் தகவல். அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியாவில்  சில பகுதிகளை படமாக்கிய பிறகு , 'சர்தார்' டீம் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. மேலும் படக்குழு தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது . படத்தின் க்ளைமாக்ஸ் பகுதி பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது, மேலும் ஷெட்யூல் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

23
sardar update

போலீஸ் த்ரில்லராக அறிவிக்கப்பட்ட கார்த்தி, இளம் போலீஸ்காரராகவும், வயதான கைதியாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அதே நேரத்தில் லைலா படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் நடிகை லைலா தனது இரண்டாவது இன்னிங்ஸை களமிறங்கத் தொடங்குகிறார். இதற்கிடையில், 'சர்தார்' படத்தின் திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்ட நிலையில், படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

33
sardar update

எச்.வினோத்துடன் அஜித் நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளிவருவதால்  கார்த்தி பாக்ஸ் ஆபிஸில் அஜித்துடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட்கள் ஜூலை 1 முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியும் 'விருமன்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories