நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமா உலகில் பிரபலமான சூரி தற்போதும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக இவர் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
25
viduthalai shooting spoot
பல ஆண்டுகளாக இந்த படம் படப்பிடிப்பில் உள்ளது. வரும் நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து படப்பிடிப்பு போஸ்டர்கள் மற்றும் சண்டை பயிற்சி சண்டை காட்சிகளுக்கான போஸ்களும் வெளியாகி இருந்தது.
விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளூர் விநியோகத்தை பார்க்கவுள்ளது. இந்நிலையில் படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது வெற்றி மாறனுடன் மற்றொரு இயக்குனரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.
45
viduthalai soori
துணை இயக்குனராக பணியாற்றி தற்போது பிரபல இயக்குனராக வளம் வரும் துரை செந்தில்குமார் தான் புதிதாக இணைந்துள்ளாராம். இவர் இயக்கத்தில் முன்னதாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு, அதிகாரம் உள்ளிட்ட படங்கள் உருவாகியிருந்தது.
55
viduthalai
இவர்கள் இருவரும் இணைந்து விடுதலை படத்தின் கடைசி காட்சிகளை இயக்கி வருவது குறித்தான செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதோடு மலைவாழ் மக்களின் கதைக்களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படம் கட்டாயம் விருது பெரும் என சொல்லப்படுகிறது.