kangana ranaut : ஆரம்பிக்கலாமா!...நான் அரசியலுக்கு ரெடி..மாஸ் காட்டும் கங்கனா ரணாவத்

Published : Oct 30, 2022, 07:24 PM IST

இதன் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் வரும்  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்இவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருத்து எழுந்துள்ளது.

PREV
17
kangana ranaut : ஆரம்பிக்கலாமா!...நான் அரசியலுக்கு ரெடி..மாஸ் காட்டும் கங்கனா ரணாவத்

தென்னிந்திய சினிமாவுலகில்  பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதன் மூலம் இவர் மிகப் பிரபலம் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

27

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதற்காக சென்னை வருகை தந்த இவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

37
kangana ranaut

தற்போது `மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா தேவியின் கதையை மையமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்திற்கு எமர்ஜென்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

47

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி இருந்தது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர். இந்துவும் சார்ந்தகருத்துக்களை அவ்வப்போது பகிரும் இவர் மொழி பிரச்சனைகளையும் கையில் எடுத்து வருகிறார்.

57

இதனால் இவர் அரசியலுக்கு வரலாம் என்கிற ஒரு கருத்து நிலவி வந்தது. ஆனால் இது குறித்த எந்த கேள்விக்கும் இவர் பதில் அளித்ததில்லை. ஆனால் தற்போது இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அரசியல் குறித்து பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது.

67

அந்த பேட்டியில் அரசியலில் நுழைவது மற்றும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஒரு கலைஞனாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு. எதிர்காலத்தில் அரசியலை மையமாக வைத்து திரைப்படங்களை தயாரிப்பேன் நாட்டிற்கு நல்லது செய்பவர்களுக்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அதற்கு எல்லா வகையிலும் நான் ஆதரவில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

77

மேலும் இமாச்சலப் பிரதேச மக்கள் தனக்கு ஆதரவளித்தால் நன்றாக இருக்கும் என்கிற பிட்டையும் போட்டுள்ளார். இதன் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் வரும்  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்இவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருத்து எழுந்துள்ளது.

click me!

Recommended Stories