பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பந்த்ராவில் உள்ள அவரது கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைய முயன்றதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை இரண்டு தனித்தனி சம்பவங்கள். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடந்த இந்த சம்பவங்களில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் சிங் மற்றும் ஒரு பெண் ஆகியோரை பந்த்ரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
24
சல்மான் வீட்டில் நடந்தது என்ன?
சிங் நடிகரின் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்த பாதுகாவலர்கள் அவரை வெளியேறச் சொன்னார்கள். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது செல்பேசியை உடைத்தார். பின்னர் ஒரு காரின் பின்னால் ஒளிந்துகொண்டு, அதே நாள் மாலை கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் நுழைய முயன்றார். அப்போது அவரைப் பாதுகாவலர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சல்மானைச் சந்திக்கவே அவரது அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றதாக சிங் கூறியுள்ளார்.
34
சல்மான் கானை சந்திக்க வந்த பெண் யார்?
மற்றொரு சம்பவத்தில், இஷா சாப்ரியா (36) என்ற பெண் புதன்கிழமை காலை கட்டிடத்திற்குள் நுழைந்து, நடிகர் தன்னை அழைத்ததாகக் கூறி, வீட்டின் கதவைத் தட்டினார். பாதுகாவலர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் பொய் சொல்வது தெரியவந்ததால், அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலின் பல கொலை மிரட்டல்களை எதிர்கொண்டு வரும் சல்மான் கானுக்கு மும்பை காவல்துறை ‘Y-பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது.
நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக சிக்கந்தர் திரைப்படம் வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் கடந்த மார்ச் மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு பின்னர் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தையும் கிடப்பில் போட்டார் சல்மான் கான். அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.