வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், மணிரத்னத்தின் தக் லைஃப் படம் குறித்த செய்திகள் சினிமா வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் இணையும் இந்தப் படம் ஜூன் 5ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் திரிஷாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையேயான வயது வித்தியாசம் 30. அதையும் மீறி அவர்கள் காதல் காட்சிகளில் நடித்துள்ளது ஆகியவை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
24
விமர்சனங்களுக்கு திரிஷா பதில்
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் திரிஷா கலந்து கொண்டார். டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள கமல்ஹாசனுடனான காதல் காட்சிகள் மற்றும் வயது வித்தியாசம் குறித்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார். இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக திரிஷா தெரிவித்தார். கமல்ஹாசனுடன் திரையில் ஜோடியாக நடித்தது மாயாஜால அனுபவம் என்றும் அவர் கூறி உள்ளார்.
34
தக் லைஃப் பற்றி திரிஷா சொன்னதென்ன?
தொடர்ந்து பேசிய அவர் "படம் அறிவிக்கப்பட்டபோதே இதுபோன்ற காட்சிகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அப்போது நான் படத்தில் கையெழுத்திடக்கூட இல்லை. இதைக் கேட்டதும், இது மாயாஜாலம் என்று நினைத்தேன். அப்போது நான் படத்தின் ஒரு அங்கமாக இல்லை." கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைவது குறித்துப் பேசிய திரிஷா, "அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும்போது, நாங்கள் நடிகர்களாக இருந்தாலும், அவர்களைப் பார்த்து வியப்படைவோம்" என்றார்.
தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சுகர் பேபி' பாடலுக்கு த்ரிஷா கிருஷ்ணன் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். 40 வயதான ஒரு நடிகை இதுபோன்ற தலைப்பில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது சரியல்ல என்று சமூக ஊடகங்களில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் மீண்டும் இணைவதால், தக் லைஃப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.