ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ‘திண்டுக்கல் சாரதி’ பட நடிகை கார்த்திகா

Published : May 23, 2025, 10:25 AM ISTUpdated : May 23, 2025, 10:26 AM IST

‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கார்த்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. திரைத்துறையில் இருந்து விலகிய அவர், தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

PREV
14
‘காசி’ படத்தின் மூலம் கார்த்திகா தமிழில் அறிமுகம்

தமிழ் திரையுலகில் புதுமுக நடிகர்கள் அறிமுகமாவதும் சில படங்களுக்குப் பின்னர் அவர்கள் காணாமல் போவதும் வழக்கமாக இருக்கிறது. சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர், நடிகைகள் பலர் உண்டு. அந்த வரிசையில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒரு நடிகை தான் ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் நடித்த நடிகை கார்த்திகா. இவர் 2001-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘காசி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

24
கார்த்திகா நடித்த தமிழ் படங்கள்

அதன் பின்னர் ‘ஊமை பெண்ணின் உரியட பையன்’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், ‘நம் நாடு’, ‘என் மன வானில்’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘நாளை நமதே’, ‘ஆறு மனமே’, ‘பாலைவனச் சோலை’, ‘புலன் விசாரணை 2’ ஆகிய படங்களில் நடித்தார். 2001-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பல மலையாள படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புலன் விசாரணை 2’. அதன் பின்னர் இவர் திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகினார்.

34
கார்த்திகாவின் திருமண வாழ்க்கை

கார்த்திகா தனது நீண்டகால காதலரான மேத்யூ என்பவரை 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மருத்துவரான மேத்யூ, அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதால் கார்த்திகா தனது கணவருடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது கார்த்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

44
கார்த்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள்

உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் கார்த்திகா. அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் நடித்த கார்த்திகாவா இவர்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories