நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவியின் விவாகரத்து தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆர்த்தி அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்க, மறுபுறம் ரவி மோகன் தன் புதுக்காதலி கெனிஷா உடன் ஜோடியாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ஆர்த்திக்கு பதிலடி கொடுத்து ரவி மோகன் வெளியிட்ட அறிக்கையில், அவர் தன்னுடைய வாழ்க்கை துணை என்று கெனிஷாவை குறிப்பிட்டு இருந்தார்.
24
40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். திருமண வாழ்க்கையைத் தொடர விருப்பமில்லை என ரவி மனுவில் தெரிவித்த நிலையில், மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரியுள்ளார். விவாகரத்தை ரத்து செய்யக் கோரிய ஆர்த்தியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என ரவி மோகன் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
34
ஆர்த்தி அடுக்கிய குற்றச்சாட்டுகள்
இதற்கிடையில், மே 20 அன்று தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். தங்கள் திருமண உறவு முறிவுக்கு ஒரு "மூன்றாம் நபர்" காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். தானும் தனது குடும்பமும் ஒரு தொல்லையாக இருந்தால், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ரவி ஏன் காத்திருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “என் குடும்பத்தினர் எங்கள் உறவில் ஒருபோதும் தலையிட்டதில்லை. எங்கள் உறவில் மூன்றாவது நபர் இருக்கிறார். எங்கள் உறவு முறிவுக்குக் காரணம் இந்த வெளி நபர்தான். 'அவரது வாழ்க்கையின் ஒளி' எங்கள் வாழ்க்கையில் இருளை ஏற்படுத்தியது. இதுதான் உண்மை” என்று ஆர்த்தி அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆர்த்தியும், ரவி மோகனும் அறிக்கை போர் நடத்தி வரும் சூழலில் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில், நடந்தவற்றிற்கு நான் தான் காரணம் என்றால் என்னை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அதைவிட்டுவிட்டு தயவு செய்து எனக்கு எதிராக மீடியாவில் வெறுப்பை பரப்பாதீர்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். நீங்கள் எனக்கு கொடுக்கும் சாபம் மற்றும் கொலை மிரட்டல்களால் நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று யாராவது யோசித்து பார்த்தீர்களா? உண்மை வெளிவரும் போது உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை நான் பார்க்க விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நான் கடவுளிடம் சரணடைகிறேன் என கெனிஷா பதிவிட்டு இருக்கிறார்.