நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன், வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தோடு சினிமாவை விட்டு விலகுகிறார் விஜய். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானுயர உள்ளது.
24
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா
ஜன நாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான தளபதி கச்சேரி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. அப்பாடலை அனிருத் உடன் இணைந்து விஜய்யும் பாடி இருந்தார். அப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்ஸ்டாவிலும் அப்பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் போட்டு கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட் வந்தது. அதன்படி வருகிற டிசம்பர் 27ந் தேதி மலேசியாவில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
34
மலேசியாவில் ஆடியோ லான்ச்
விஜய்யின் கடைசி படம் என்பதால் அதன் இசை வெளியீட்டு விழாவை காண தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஆவலோடு இருக்க, திடீரென அதை மலேசியாவில் நடத்துவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதில் பல சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம். இந்த இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் என்கிற பிரம்மாண்ட அரங்கத்தில் தான் நடைபெற உள்ளதாம். அந்த அரங்கத்தில் 85 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியுமாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் இந்த ஆடியோ லாஞ்சுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால் அது ஆடியோ லான்ச் இல்லையாம், அதை தளபதி கச்சேரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய்யின் கெரியரில் சூப்பர் ஹிட் அடித்த 35 பாடல்களை அதன் ஒரிஜினல் பாடகர்களே பாட உள்ளார்களாம். இதனால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது. அதோடு அனிருத்தும் ஜன நாயகன் பட பாடல்களை தன்னுடைய குழுவினருடன் பாட இருக்கிறார். மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால் ஜன நாயகன் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.