மே 7 ஆம் தேதி அதிகாலை, இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
24
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்
பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாடே கொண்டாடுகிறது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மின்னல் வேகத் தாக்குதலால் பயங்கரவாதிகள் நிலைகுலைந்துள்ளனர். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
34
சக்சஸ் ஆன ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது மின்னல் வேகத் தாக்குதல் நடத்தி அழித்தன. இதனால் நாடே இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. குறிப்பாக திரைப்பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. விஜய் தவிர நடிகர் ரஜினிகாந்தும் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.