நடிகர் நாக சைதன்யா, சமந்தாவுடனான விவாகரத்திற்குப் பிறகு சோபிதா துலிபாலாவை மணந்தார். சோபிதா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
நடிகர் நாக சைதன்யா, சமந்தாவுடனான திருமண முறிவுக்குப் பின்னர், நடிகை சோபிதா துலிபாலாவை மணந்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, சோபிதா கர்ப்பமாக இருப்பதாக சில செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
25
Sobhita Dhuliapala Photos
நாக சைதன்யா, சமீபத்தில் 'தூதா' என்ற வலைத்தொடரிலும், 'கஸ்டடி' என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். 'கஸ்டடி' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தற்போது அவர் சாய் பல்லவியுடன் 'தண்டெல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
35
Sobhita Dhuliapala
நடிகை சமந்தாவுடன் 'விண்ணைத்தாண்டி வருவாயா' தெலுங்கு மறு ஆக்கத்தில் நடித்தபோது நாக சைதன்யாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் 2017ல் கோவாவில் திருமணம் நடந்தது. இருப்பினும், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சமந்தாவை பிரிந்த பிறகு, நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இடையே காதல் உருவானது. இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து, கடந்த வருடம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நாகேஸ்வர ராவ் சிலை முன் சோபிதாவுக்கு அவர் தாலி கட்டினார்.
55
திருமணத்திற்குப் பின்னரும் சோபிதா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு நாக சைதன்யாவும், அவரது தந்தை நாகார்ஜுனாவும் ஆதரவளித்து வருகின்றனர். சோபிதா கர்ப்பமாக இருப்பதாக பரவிய தகவல் தவறானது என்றும், அவர் அணிந்திருந்த தளர்வான உடை காரணமாக அப்படித் தோன்றியதாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.